தாலாட்டும் பூங்காற்று

கோபுர வாசலிலே (1991)
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
இயக்கம்: ப்ரியதர்ஷன்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

ஓர் உண்மை சொன்னால் நேசிப்பாயா

ஆயுத எழுத்து (2004)
பாடியவர்: அதன் சமி, சதனா ஷர்கம்
இசை: ஏ.ஆர். ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: மணிரத்னம்

ஓர் உண்மை சொன்னால்
நேசிப்பாயா

நெஞ்சமெல்லாம்
காதல்
தேகமெல்லாம்
காமம்
உண்மை சொன்னால்
என்னை
நேசிப்பாயா?

காதல் கொஞ்சம்
கம்மி
காமம் கொஞ்சம்
தூக்கல்
மஞ்சத்தின் மேல்
என்னை
மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா

நேசிப்பாயா, நேசிப்பாயா,
நேசிப்பாயா, நேசிப்பாயா,

பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா

நெஞ்சமெல்லாம்
காதல்
தேகமெல்லாம்
காமம்
உண்மை சொன்னால்
என்னை
நேசிப்பாயா?

காதல் கொஞ்சம்
கம்மி
காமம் கொஞ்சம்
தூக்கல்
மஞ்சத்தின் மேல்
என்னை
மன்னிப்பாயா?

காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை

ஓர் உண்மை சொன்னால்
நேசிப்பாயா

நெஞ்சமெல்லாம்
காதல்
தேகமெல்லாம்
காமம்
உண்மை சொன்னால்
என்னை
நேசிப்பாயா?

காதல் கொஞ்சம்
கம்மி
காமம் கொஞ்சம்
தூக்கல்
மஞ்சத்தின் மேல்
என்னை
மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா

மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்..

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா

மனசெல்லாம் மார்கழி தான்
இரவெல்லாம் கார்த்திகை தான்..

வான் நிலவு தான்

புகைப்படம் (2010)
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இசை: கங்கை அமரன்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
இயக்கம்: ராஜேஷ் லிங்கம்

வான் நிலவு தான் அருகிலே இதோ
என் கனவிலே வந்தவள் இதோ
நான் யாரோடும் உரையாடும் நேரத்தில் எல்லாம்
இரு கண் பார்த்து தான் பேசுவேன்
அடி உன்னோடு உரையாடும் நேரத்தில் மட்டும்
ஏன் எங்கெங்கோ நான் பார்க்கிறேன்
ஓ வான் நிலவு தான் அருகிலே இதோ
ஓ ஹோ ஹோ ஹோ

காற்றோடு கை வீசி நீ பேசும் போது
மெழுகாக நான் மாறுவேன்
நீ போன பின்னாலும் நீ நின்ற இடத்தில்
உன் வாசம் நான் தேடுவேன்
உன்னுடன் நான் வாழும் இரவென்றும் பெண்ணே
விடிந்திட கூடாதடி
உதடு வரைக்கும் ஒரு வார்த்தை
நெருங்கி வந்த பின்னாலும்
தயக்கம் வந்து தூண்டில் போட்டு இழுக்கும்
உனது அருகில் இருக்கும் இந்த நிமிடம் போதும்
வேறென்ன நான் கேட்கிறேன்

வான் நிலவு தான் அருகிலே இதோ

அதிகாலை பனி தூங்கும் கண்ணாடி கதவில்
உன் பேரை நான் தீட்டுவேன்
ஆள் யாரும் இல்லாத இடம் தேடி சென்று
உன்னை போல நான் பேசுவேன்
உன் விரல் தொடுகின்ற இளம் சூட்டில் பெண்ணே
இரவினில் குளிர் காய்கிறேன்
கருவில் வாழும் நாள் கூட
பத்து மாதம் வரை தானே
காதல் நெஞ்சம் ஆயுள் முழுதும் சுமக்கும்..
உனது அருகில் இருக்கும் இந்த நிமிடம் போதும்
வேறென்ன நான் கேட்கிறேன்

வான் நிலவு தான் அருகிலே இதோ..
என் கனவிலே வந்தவள் இதோ
நான் யாரோடும் உரையாடும் நேரத்தில் எல்லாம்
இரு கண் பார்த்து தான் பேசுவேன்
அடி உன்னோடு உரையாடும் நேரத்தில் மட்டும்
ஏன் எங்கெங்கோ நான் பார்க்கிறேன் ஹோ..
ர ர ர ர ர ர ..

அழகாக சிரித்தது அந்த நிலவு..

டிசம்பர் பூக்கள் (1986)
பாடியவர்: ஜெயசந்திரன், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
இயக்கம்: R.பூபதி

அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ
மழைக்காலத்தில்.. லல லல லலா
நிழல் மேகங்கள்.. லல லல லலா
மலையோரத்தில்.. லல லல லலா
சிறு தூரல்கள்.. லல லல லலா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல

அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ
மழைக்காலத்தில்.. லல லல லலா
நிழல் மேகங்கள்.. லல லல லலா
மலையோரத்தில்.. லல லல லலா
சிறு தூரல்கள்.. லல லல லலா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல
அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ

நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
மானே உன்னழகினில் நானே
ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தை தானே
எடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான்
வரவோ.. நாணமென்ன அச்சமென்ன

அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ

உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கிவரும் தேகம்
கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டிலில் இணை சேரும் என் கண்ணல்லவா
இளமாலை பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை
இதுவோ.. இருவிழி சிவந்திட

அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ
மழைக்காலத்தில்.. லல லல லலா
நிழல் மேகங்கள்.. லல லல லலா
மலையோரத்தில்.. லல லல லலா
சிறு தூரல்கள்.. லல லல லலா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல
அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ

நினைவெல்லாம் நித்யா – BGM

நினைவெல்லாம் நித்யா (1981)
இசை: இளையராஜா
இயக்கம்: ஸ்ரீதர்

Ninaivellam Nithya Love Theme