நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

கடல் (2013)
பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
இசை: ஏ.ஆர். ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: மணிரத்னம்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே
கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தோங்கிருச்சு
இச்சி மரத்து மேல இல கூட தூங்கிருச்சு
காச நோய் நொடிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆசை நோய் வந்த மக அர நிமிஷம் தூங்கலையே

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

ஒரு வாய் இறங்கலையே உள் நாக்கு நெனையலயே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
ஏழ இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர்(ரு) வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே ஹோ

ஹோ நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே
கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

The Red Balloon (1956)

The Red Balloon (1956)

Le ballon rouge
Director: Albert Lamorisse
Language: French
Country: France

The Red Balloon

The Red Balloon

Through the imagination of a child…

A red balloon with a life of its own follows a little boy around the streets of Paris.

The Red Balloon Photo Gallery

This slideshow requires JavaScript.

Awards

Academy Awards – Best Writing, Best Screenplay – Original
BAFTA Awards – Special Award
Cannes Film Festival – Palme d’Or – Best Short Film
Prix Louis Delluc – Albert Lamorisse
New York Film Critics Circle Awards – Best Foreign Language Film

The Red Balloon Full Movie

 

படித்ததில் பிடித்தது – 7

படித்ததில் பிடித்தது – 7

படித்ததில் பிடித்தது

கனவு கண்டது போல்
கையில் குடையோடு வந்திருந்தாய்
உன்னை ஏமாற்ற மனமில்லாமல்
இறங்கி வந்தது மழையும்.
நீர்த் தாரைகளைச் சொடுக்கி
உன்னோடு என்னையும்
கரைத்துவிடுவது போல்
அடைத்துப் பெய்தது
அந்த அந்தி மழை.
சிரித்துக் கொண்டுபோய் மலர்த்தி
நீ பரிசளித்த குடையை
ஏந்திப் பிடித்துக்கொண்டு
கடலுக்குள் ஓடின அலைகள்.

உன்னைச் சந்திக்கும்போதெல்லாம்
தொலைபேசும் பேச்சிலெல்லாம்
கடிதம் எழுதும்போதெல்லாம்
உன்னைக் காதலிக்கிறேன்
காதலிக்கிறேன்
என்று மறுகுவேன்.

ஈரம் சொட்டச் சொட்ட
வெதுவெதுப்பான சொற்களில்
அன்றும் மறுகினேன்.

செய்துகொண்டிருப்பதை ஏன்
சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்
என்ற செருக்கிலிருந்தாய்
வழக்கம் போல்.

எப்போதும் உன்னைக்
காதலித்தேன் நான்
‘எப்போதாவதுதான்’ என்றாய் நீ.

மழை திடுக்கிட்டு நின்றது
பொழுதும் இரவாகி உருவங்கள்
இருண்டன.

ஏழு சொட்டு மௌனத்திற்குப் பிறகு
வானம் ஒரு நீள மின்னல் கொடியை
நீட்டியதுபோது
நடுக்கடலில் மொட்டாகி நின்றது
உன் குடை.

நெஞ்சில் மஞ்சள் ஒளிவிரித்து
உன்னை நான் மறந்தும்
என்னை நீ மறந்தும்
ஒரு கணம் நேசித்தோம்
கடலை!