மனசுல சூற காத்தே

மனசுல சூற காத்தே

குக்கூ (2014)
பாடியவர்: திவ்யா ரமணி, RR
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடலாசிரியர்: யுகபாரதி
இயக்கம்: ராஜூ முருகன்

மனசுல சூற காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூற காத்தே அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே
உந்தன் வாசணை வானவில் காட்டுதே

வாவென்று சொல்லும் முன்னே வருகின்ற நியாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம்
ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை சுடச்சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும் நெஞ்சமே காதலின் தாயகம்

ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே
கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே
மூச்சிலே வானொலி பாடுதே

மனசுல சூற காத்தே அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே
உந்தன் வாசணை வானவில் காட்டுதே

மழைச்சாரல்  – 14 [மழை போன பின்னும்]

மழைச்சாரல் – 14 [மழை போன பின்னும்]

மழை போன பின்னும்

மழை போன பின்னும்

பச்சையுமாய்
ஈரமுமாய் குளிர்ச்சியுமாய்
தலை துவட்டாம்ல்
மரங்கள்…
செடிகள்…
கொடிகள்…