எண்ணங்கள் வான் நோக்கி

எண்ணங்கள் வான் நோக்கி

இனிது இனிது (2010)
பாடியவர்: கல்யாணி
இசை: மிக்கி ஜே மேயர்
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: கே.வி. குகன்

எண்ணங்கள் வான் நோக்கி உயர வேண்டும்
எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும்
பெண்ணென்றால் தாயென்று பார்க்க வேண்டும்
கண்ணோடு வாய்மைத் தீ கனல வேண்டும்
போராடி வெல்கின்ற புலமை வேண்டும்
பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்
நன்மைகளைச் சுரண்டாத நட்பு வேண்டும்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் வேண்டும்

வயதுக்குச் சரியான வாழ்க்கை வேண்டும்
சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும்
பறவைகளுக் கிருக்கின்ற சிறகு வேண்டும்
வெறுந்தரையில் படுத்தாலும் உறக்கம் வேண்டும்
பொறி ஐந்தும் அறிவாலே நிரம்ப வேண்டும்
சிந்தனையைக் காற்றாகப் பரப்ப வேண்டும்
பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்

வயதுக்குச் சரியான வாழ்க்கை வேண்டும்
சொன்னபடி கேட்கின்ற உள்ளம் வேண்டும்
பறவைகளுக் கிருக்கின்ற சிறகு வேண்டும்
ஆகாயம் இடிந்தாலும் ரசிக்க வேண்டும்
பொறி ஐந்தும் அறிவாலே நிரம்ப வேண்டும்
சிந்தனையைக் காற்றாகப் பரப்ப வேண்டும்
பொய் சொன்னால் சுடுகின்ற நாவும் வேண்டும்
காலத்தின் மாற்றத்தை மதிக்க வேண்டும்