பூஜைக்கேத்த பூவிது..

நீதானா அந்தக் குயில் (1986)
பாடியவர்: கங்கை அமரன், சித்ரா
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: R.செல்வராஜ்

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது..

பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது..

ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல
வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல
சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற
என்னப் பார்த்து என்ன கேட்ட.. ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு.. மாலை வந்து மாத்துற

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..
பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது.. யாரத பாத்தது

சின்னஞ்சிறு வயதில்

மீண்டும் கோகிலா (1981)
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இயக்கம்: ஜி.என்.ரங்கராஜன்

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மச்சான் மச்சான்

சிலம்பாட்டம் (2008)
பாடியவர்: இளையராஜா, பெலா ஷாண்டே
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் : நா.முத்துகுமார்
இயக்கம்: சரவணன்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் – வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் – வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

ஏழெழு ஜென்மம் தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுகுள்ள உன்ன சுமப்பேனே

தாயாகி சில நேரம்
சேயாகி சில நேரம்
மடி மேல உன்னை சுமப்பேனே
சந்தோசத்தில் என்ன மறப்பனே

கொன்னு புட்ட கொன்னு புட்ட
கொன்னு புட்ட உன்ன விட்டு
நெஞ்சுக்குள்ள

கொன்னு புட்டு கொன்னு புட்டு
வண்ண பொட்டு தென்னம் பொட்டு
என்ன உனக்கு தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் – வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

சொல்ல வந்த வார்த்த சொன்ன வார்த்த
சொல்லப் போகும்
வார்தை யாவும் நெஞ்சில் இனிக்குமே

என்னை என்ன கேட்டு என்ன சொன்ன
என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ உழைக்குதே

பெண்ணே உந்தன் கொலுசு
எந்தன் மனச மாட்டிப் போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே

பூத்திருக்க சொல்லி தினம்
தாவணிய போட்டேனே

உசுரத் தான் விட்ட கூட
உன்ன விட மாட்டேனே
மானே அடி மானே ஹே ஹே!

கொன்னு புட்ட கொன்னு புட்ட
கொன்னு புட்ட ஒன்ன விட்டு
நெஞ்சுகுள்ள

கொன்னு புட்டு கொன்னு புட்டு
வண்ண பொட்டு தென்னம் பொட்டு
என்னை உனக்கு தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் – வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

வாசம் வெச்ச நெஞ்சு எலவம் பஞ்சு
போல தானே
உன்ன தேடி நாளும் பறக்குமே

அம்மி கல்லு மேல காலு வெச்சு
மெட்டிப் போடும்
அந்த நாள மனசும் நெனைக்குமே

கண்ண மூடி பார்த்தா
எங்கும் நீ தான் வந்து போகுற
உடல் பொருள் ஆவி நீ தானே ஹே ஹே ஹே

என்ன வேணும் என்ன வேணும்
சொல்லி புடு ராசவே

உன்னப் போல பொட்டப் புள்ள
பெத்துகுடு ரோசவே
தேனே வந்தேனே ஹே ஹே

கொன்னு புட்ட கொன்னு புட்ட
கொன்னு புட்ட ஒன்ன விட்டு
நெஞ்சுக்குள்ள

கொன்னுபுட்டு கொன்னுபுட்டு
வண்ண பொட்டு தென்னம் பொட்டு
என்னை உனக்கு தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆச வெச்சான் – வெச்சி
தச்சான் தச்சான் உசுரோட உன்ன தச்சான்

ஆசை ராஜா ஆரீரோ

மூடு பனி (1980)
பாடியவர்: உமா ரமணன்
இசை: இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இயக்கம்: பாலு மகேந்திரா

ஆசை ராஜா ஆரீரோ
அம்மா பொன்னே ஆரீரோ
தோளிலே மாலையாய்
ஆடும் கண்ணா ஆரீரோ
ஆடும் கண்ணா ஆரீரோ

ஆசை ராஜா ஆரீரோ
அம்மா பொன்னே ஆரீரோ
தோளிலே மாலையாய்
ஆடும் கண்ணா ஆரீரோ
ஆடும் கண்ணா ஆரீரோ

ஆரீரோ
ஆரீரோ

அந்தி மழை பொழிகிறது

ராஜபார்வை (1981)
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
இயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தால் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திளமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அதிகாலை நேரமே… புதிதான ராகமே..

மீண்டும் ஒரு காதல் கதை (1985)
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இயக்கம்: பிரதாப் போத்தன்

அதிகாலை நேரமே புதிதான ராகமே

எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது..
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..
புது சங்கமம் சுகம் எங்கிலும்
என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்..

அதிகாலை நேரமே.. புதிதான ராகமே..
எங்கெங்கிலும் ஆலாபனை..
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்..
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..
தோளோடு தான் தோள் சேரவே..
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..

அதிகாலை நேரமே.. புதிதான ராகமே..
எங்கெங்கிலும் ஆலாபனை..
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

தென்றல் வந்து தீண்டும் போது

அவதாரம் (1995)
பாடியவர்: இளையராஜா, ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
இயக்கம்: நாசர்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை