இவள் ஒரு இளங்குருவி

பிரம்மா (1991)
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
இயக்கம்: கே.சுபாஸ்

இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்.. நடை தத்தி தத்தி பழகும்

இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி

கால் போகும் போக்கில்.. மனம் போகும் நாளில்..
கிடையாது தடை போட முள்வேலிதான்
நான் போகும் பாதை.. நிழல் போல கூட..
வருகின்ற பூங்காற்றும் என் தோழிதான்
நீண்ட தூரம் ஓடும் மேகம் யாரை தேடுதோ
நீரில்லாமல் வாடும் எந்தன் ஊரை தேடுதோ
நானும் என்னை கேள்வி கேட்கும் நாள் இது..
திரு நாள் இது..

இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி

நான் பாடும் பாட்டு.. தலையாட்டி கேட்டு..
தினம் தோறும் பூ பூக்கும் தோட்டங்களே
நீரோடை மீது நொடி போதில் பாய்ந்து
இரை தேடும் செந்நாரை கூட்டங்களே
ஆலம் விழுதில் ஊஞ்சல் போட்டு ஆட்டம் ஆடுவேன்
ஆவல் தீர தாளம் போட்டு பாட்டு பாடுவேன்
வேனிற்காலம் வாழ்த்து கூறும் நாள் இது..
திரு நாள் இது..

இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி
நித்தம்.. நித்தம் நித்தம்.. நடை தத்தி தத்தி பழகும்

இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி

தாலாட்டும் பூங்காற்று

கோபுர வாசலிலே (1991)
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
இயக்கம்: ப்ரியதர்ஷன்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

அழகாக சிரித்தது அந்த நிலவு..

டிசம்பர் பூக்கள் (1986)
பாடியவர்: ஜெயசந்திரன், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
இயக்கம்: R.பூபதி

அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ
மழைக்காலத்தில்.. லல லல லலா
நிழல் மேகங்கள்.. லல லல லலா
மலையோரத்தில்.. லல லல லலா
சிறு தூரல்கள்.. லல லல லலா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல

அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ
மழைக்காலத்தில்.. லல லல லலா
நிழல் மேகங்கள்.. லல லல லலா
மலையோரத்தில்.. லல லல லலா
சிறு தூரல்கள்.. லல லல லலா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல
அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ

நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக் கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
மானே உன்னழகினில் நானே
ஓவியம் வரைந்தேனே கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தை தானே
எடுத்துக் கொடுத்தேனே நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான்
வரவோ.. நாணமென்ன அச்சமென்ன

அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ

உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கிவரும் தேகம்
கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டிலில் இணை சேரும் என் கண்ணல்லவா
இளமாலை பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை
இதுவோ.. இருவிழி சிவந்திட

அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ
மழைக்காலத்தில்.. லல லல லலா
நிழல் மேகங்கள்.. லல லல லலா
மலையோரத்தில்.. லல லல லலா
சிறு தூரல்கள்.. லல லல லலா
இளவேனிற்காலம் ஆரம்பம்
லல லல லல லல
அழகாக சிரித்தது அந்த நிலவு.. அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது.. இதுதான் வயதோ

அந்தி மழை பொழிகிறது

ராஜபார்வை (1981)
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
இயக்கம்: சிங்கீதம் சீனிவாசராவ்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தால் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திளமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அதிகாலை நேரமே… புதிதான ராகமே..

மீண்டும் ஒரு காதல் கதை (1985)
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இயக்கம்: பிரதாப் போத்தன்

அதிகாலை நேரமே புதிதான ராகமே

எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது..
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..
புது சங்கமம் சுகம் எங்கிலும்
என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்..

அதிகாலை நேரமே.. புதிதான ராகமே..
எங்கெங்கிலும் ஆலாபனை..
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்..
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..
தோளோடு தான் தோள் சேரவே..
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..

அதிகாலை நேரமே.. புதிதான ராகமே..
எங்கெங்கிலும் ஆலாபனை..
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

பிள்ளை நிலா

நீங்கள் கேட்டவை (1984)
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
இயக்கம்: பாலு மகேந்திரா

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா.
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா.
அலை போலவே உறவாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா.
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா.

என்னாலும் நம்மை விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விலையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளம் சோலை
பாலை விடும் நாளை
தென்னை இளம் சோலை
பாலை விடும் நாளை
கை இரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்
பாடும் கண்கள் மூடும்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா.
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா.
அலை போலவே உறவாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே

ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
எங்களால் தாயே
உயிர் சுமந்தேனே
எங்களால் தாயே
உயிர் சுமந்தேனே
கண்களிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டி வைத்தாய்
நீயே எங்கள் தாயே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா.
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா.
அலை போலவே உறவாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா.
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா

தும்பி வா…

ஓலங்கள் (1982) (மலையாளம்)
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : ONV Kurup
இயக்கம்: பாலு மகேந்திரா

தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்
தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்
ஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் தொட்டே வராம்
ஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் தொட்டே வராம்
தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞால் இடாம்
தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞால் இடாம்

லா லா லா லா லா ஆ லா லா
ஆ ஆ ஆ லாலாலா லா லா ஆ ஆ லா லா

மந்ரத்தால் பாயுன்ன குதிரையே மாணிக்க கையால் தொடாம்
மந்ரத்தால் பாயுன்ன குதிரையே மாணிக்க கையால் தொடாம்
கந்தர்வன் பாடுன்ன மதிலது மந்தாரம் பூவிட்ட தணலில்
ஊஞ்ஞாலே பாடாமோ ஊஞ்ஞாலே பாடாமோ
மானத்து மானன்ட கைகளில் மாமுண்ணான் போகாமோ நமக்கினி
தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்
ஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில்ஆயத்தில் பொட்டே வராம்
தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்

பண்டத்தே பாட்டின்டே வரிகளு சுண்டத்தில் தேன் துள்ளியாய்
பண்டத்தே பாட்டின்டே வரிகளு சுண்டத்தில் தேன் துள்ளியாய்
கல்கண்டெ குன்னின்றே முகளினில் காக்கத்தி மேயுன்ன தணலில்
கல்கண்டெ குன்னின்றே முகளினில் காக்கத்தி மேயுன்ன தணலில்
ஊஞ்ஞாலே பாடிப்போய் ஊஞ்ஞாலே பாடிப்போய்
ஆக்கையில் இக்கையில் ஒருபிடி கைக்காத நெல்லிக்காய் மணி தரு
தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்
ஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் பொட்டே வராம்
லா லா லா லா லா ஆ லா லா
ஆ ஆ ஆ லாலாலா லா லா ஆ ஆ லா லா
லா லா லலல லாலா லலலல
லலலலல லலல லா

This song also featured in the Telugu movie Nireekshana as “Akasam Enatido”  .