வான் நிலவு தான்

புகைப்படம் (2010)
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இசை: கங்கை அமரன்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
இயக்கம்: ராஜேஷ் லிங்கம்

வான் நிலவு தான் அருகிலே இதோ
என் கனவிலே வந்தவள் இதோ
நான் யாரோடும் உரையாடும் நேரத்தில் எல்லாம்
இரு கண் பார்த்து தான் பேசுவேன்
அடி உன்னோடு உரையாடும் நேரத்தில் மட்டும்
ஏன் எங்கெங்கோ நான் பார்க்கிறேன்
ஓ வான் நிலவு தான் அருகிலே இதோ
ஓ ஹோ ஹோ ஹோ

காற்றோடு கை வீசி நீ பேசும் போது
மெழுகாக நான் மாறுவேன்
நீ போன பின்னாலும் நீ நின்ற இடத்தில்
உன் வாசம் நான் தேடுவேன்
உன்னுடன் நான் வாழும் இரவென்றும் பெண்ணே
விடிந்திட கூடாதடி
உதடு வரைக்கும் ஒரு வார்த்தை
நெருங்கி வந்த பின்னாலும்
தயக்கம் வந்து தூண்டில் போட்டு இழுக்கும்
உனது அருகில் இருக்கும் இந்த நிமிடம் போதும்
வேறென்ன நான் கேட்கிறேன்

வான் நிலவு தான் அருகிலே இதோ

அதிகாலை பனி தூங்கும் கண்ணாடி கதவில்
உன் பேரை நான் தீட்டுவேன்
ஆள் யாரும் இல்லாத இடம் தேடி சென்று
உன்னை போல நான் பேசுவேன்
உன் விரல் தொடுகின்ற இளம் சூட்டில் பெண்ணே
இரவினில் குளிர் காய்கிறேன்
கருவில் வாழும் நாள் கூட
பத்து மாதம் வரை தானே
காதல் நெஞ்சம் ஆயுள் முழுதும் சுமக்கும்..
உனது அருகில் இருக்கும் இந்த நிமிடம் போதும்
வேறென்ன நான் கேட்கிறேன்

வான் நிலவு தான் அருகிலே இதோ..
என் கனவிலே வந்தவள் இதோ
நான் யாரோடும் உரையாடும் நேரத்தில் எல்லாம்
இரு கண் பார்த்து தான் பேசுவேன்
அடி உன்னோடு உரையாடும் நேரத்தில் மட்டும்
ஏன் எங்கெங்கோ நான் பார்க்கிறேன் ஹோ..
ர ர ர ர ர ர ..

பூஜைக்கேத்த பூவிது..

நீதானா அந்தக் குயில் (1986)
பாடியவர்: கங்கை அமரன், சித்ரா
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: R.செல்வராஜ்

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது..

பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது..

ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல
வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல
சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற
என்னப் பார்த்து என்ன கேட்ட.. ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு.. மாலை வந்து மாத்துற

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..
பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது.. யாரத பாத்தது

ஆசை ராஜா ஆரீரோ

மூடு பனி (1980)
பாடியவர்: உமா ரமணன்
இசை: இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இயக்கம்: பாலு மகேந்திரா

ஆசை ராஜா ஆரீரோ
அம்மா பொன்னே ஆரீரோ
தோளிலே மாலையாய்
ஆடும் கண்ணா ஆரீரோ
ஆடும் கண்ணா ஆரீரோ

ஆசை ராஜா ஆரீரோ
அம்மா பொன்னே ஆரீரோ
தோளிலே மாலையாய்
ஆடும் கண்ணா ஆரீரோ
ஆடும் கண்ணா ஆரீரோ

ஆரீரோ
ஆரீரோ

அதிகாலை நேரமே… புதிதான ராகமே..

மீண்டும் ஒரு காதல் கதை (1985)
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இயக்கம்: பிரதாப் போத்தன்

அதிகாலை நேரமே புதிதான ராகமே

எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது..
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..
காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது..
புது சங்கமம் சுகம் எங்கிலும்
என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்..

அதிகாலை நேரமே.. புதிதான ராகமே..
எங்கெங்கிலும் ஆலாபனை..
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..

உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்..
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற..
தோளோடு தான் தோள் சேரவே..
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..

அதிகாலை நேரமே.. புதிதான ராகமே..
எங்கெங்கிலும் ஆலாபனை..
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே..