எங்க போன ராசா

எங்க போன ராசா

மரியான் (2013)
பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
இசை: ஏ.ஆர். ரகுமான்
பாடலாசிரியர்: ஏ.ஆர். ரகுமான், குட்டி ரேவதி
இயக்கம்: பரத் பாலா

எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு..
எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு..
கஞ்சி ஆறி போச்சு
நெஞ்ச ஏரி வாயேன்

நீயும் நானும் சேர்ந்தா…
நீயும் நானும் சேர்ந்தா…
வானம் கொண்டாடும்
அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா
வாழ்க்கை வரமாகும்
இந்த வாழ்க்கை வரமாகும்

என்ன செய்ய ராசா
உன்மத்தம் ஆச்சு
எங்க போன ராசா

காலம் எனக்குள் உரையுது
கண்ணீர் கடலோடு கலக்குது
உன் முகம் உன் உடல் தேடுது
ஏனோ எனக்கென்ன கேடிது
எங்க போன ராசா….
நான் என்ன செய்ய ராசா…

எங்க போன ராசா
நான் என்ன செய்ய ராசா
என் வயசு வீனாகுது

எங்க போன ராசா
சாயங்காலம் ஆச்சு
கஞ்சி ஆறி போச்சு
நெஞ்ச ஏரி வாயே

நீயும் நானும் சேர்ந்தா…
நீயும் நானும் சேர்ந்தா…
வானம் கொண்டாடும்
அந்த வானம் கொண்டாடும்
நீயும் நானும் சேர்ந்தா
வாழ்க்கை வரமாகும்
இந்த வாழ்க்கை வரமாகும்

என்ன செய்ய ராசா
சாயங்காலம் ஆச்சு

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

கடல் (2013)
பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
இசை: ஏ.ஆர். ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து
இயக்கம்: மணிரத்னம்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே
கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

பட்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தோங்கிருச்சு
இச்சி மரத்து மேல இல கூட தூங்கிருச்சு
காச நோய் நொடிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆசை நோய் வந்த மக அர நிமிஷம் தூங்கலையே

நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

ஒரு வாய் இறங்கலையே உள் நாக்கு நெனையலயே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
ஏழ இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர்(ரு) வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே ஹோ

ஹோ நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில் வெயில் வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிர்ந்தவ தான் அப்புறமா குனியலையே குனியலையே
கொட கம்பி போல மரம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்

நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ