புதிய உலகை

புதிய உலகை

என்னமோ ஏதோ (2014)
பாடியவர்: வைக்கம் விஜயலட்சுமி
இசை: டி.இமான்
பாடலாசிரியர்: மதன்கார்க்கி
இயக்கம்: ரவி தியாகராஜன்

புதிய உலகை
புதிய உலகை
தேடிப் போகிறேன்
என்னை விடு!

விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கி பூத்ததை,
பிரிவில் முடித்துப் போகிறேன்!

மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூரமாய் வாழப் போகிறேன்

புதிய உலகை
புதிய உலகை
தேடிப் போகிறேன்
என்னை விடு!

விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

மார்பில் கீறினாய்
ரணங்களை வரங்கள் ஆக்கினாய்
தோளில் ஏறினாய்
எனை இன்னும் உயரம் ஆக்கினாய்

உன் விழி போல மண்ணில் எங்கும்
அழகு இல்லை என்றேன்!
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்?

மேலே நின்று உன்னை நாளும் காணும் ஆசையில்…

புதிய உலகை
புதிய உலகை
தேடிப் போகிறேன்
என்னை விடு!

யாரும் தீண்டிடா
இடங்களில் மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா
சிரிப்பை என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும்
அமைதி இல்லை என்றேன்!
உன் மனம் இன்று வேண்டாம் என்றே
பறந்து எங்கே சென்றேன்?

வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா?

புதிய உலகை
புதிய உலகை
தேடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கி பூத்ததை,
பிரிவில் முடித்துப் போகிறேன்!

மீண்டும் நான் மீளப் போகிறேன்
தூரமாய் வாழப் போகிறேன்

புதிய உலகை
புதிய உலகை
தேடிப் போகிறேன்
என்னை விடு!

சொல்லிட்டாளே அவ காதல

சொல்லிட்டாளே அவ காதல

கும்கி (2012)
பாடியவர்: ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்
இசை: டி.இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
இயக்கம்: பிரபு சாலமன்

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சொகம் தாளல
இது போல் ஒரு வார்தைய
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்தைய
கேட்டிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்…

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சொகம் தாளல
இது போல் ஒரு வார்தைய
யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒண்ணா பாத்தேன்

மனசையும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்…

சொல்லிட்டேனே இவ காதல

சொல்லிட்டாளே அவ காதல

ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்… ம்…

ஓ… எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து ச்ன்னா
தன்னால மறந்திடும் நிமிஷத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நெலச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்…

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சொகம் தாளல
இது போல் ஒரு வார்தைய
யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்…

ம்… ம்… ம்… ம்…

சகாயனே சகாயனே

சாட்டை (2012)
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்
இசை: டி இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
இயக்கம்: அன்பழகன்

சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே
என்னை நீ ஏன் பறித்தாய்

உன் எண்ணங்கள் தாக்க
என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு
வாசம் தந்தாய்

சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
பசி இன்றி போவதென்ன?
பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன?

தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா
தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே என்னை கையில் ஏந்து
எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து

சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே

கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போடா
இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போடா

இறந்து இறந்து பிறக்கும் நிலை இதுதானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் குடுத்தாயடா
கள்ள பார்வை என்னை கொத்தி தின்ன
என ஏது இங்கு உள்ளம் எண்ண எண்ண

சகாயனே சகாயனே
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே
என்னை நீ ஏன் பறித்தாய்

உன் எண்ணங்கள் தாக்க
என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு
வாசம் தந்தாய்