படித்ததில் பிடித்தது – 14 [கலைக்கூத்தாடி பெண்]

படித்ததில் பிடித்தது – 14 [கலைக்கூத்தாடி பெண்]

கலைக்கூத்தாடி பெண்

கலைக்கூத்தாடி பெண்

இரு கரங்களிலும் கோல்தாங்கி
கயிற்றில் நடந்தவள்
கலவரமாய் இறங்கிக்
காதோடு முணுமுணுக்கிறாள்..
விழிகளில் பரவசம்மின்ன
விழுந்த சில்லறைகளைப்
பூச்சரமாக்குகிறாள் தாய்…
“இனி பொழப்புக்கு எங்கே போறது?”
முகத்தில் சலிப்போடு
மூட்டை கட்டுகிறான் அவன்.

படித்ததில் பிடித்தது – 13 [அப்பா]

படித்ததில் பிடித்தது – 13 [அப்பா]

அப்பா

அப்பா

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?

படித்ததில் பிடித்தது – 12 [தார்ச்சாலை]

படித்ததில் பிடித்தது – 12 [தார்ச்சாலை]

தார்ச்சாலை

தார்ச்சாலை

காட்டுக் கோழியைத் துரத்தி வந்த
பூனை திகைக்க
வழித்தடம் மறிபட்டு
யானை ஒதுங்க
வலசை கிளம்பிய
கதிர்குருவி தடுமாற
காட்டின் நெஞ்சைக் கீறிக் கீறி
எழுகிறது ஒரு தார்ச்சாலை…

படித்ததில் பிடித்தது – 11 [உயிர் முத்தம்]

படித்ததில் பிடித்தது – 11 [உயிர் முத்தம்]

உயிர் முத்தம்

உயிர் முத்தம்

விளையாட்டாய்
விழி முடி அமர்கிறேன்
என்ன தருவாளென்று
கண்ணிமைக்கும் நேரத்தில்
மடியில்
தலைசாய்த்து
எனைத் தாங்கி
உயிர் முத்தம் தருகிறாள் …

படித்ததில் பிடித்தது – 10 [பூக்களைப் பாருங்கள் புரியும்!]

படித்ததில் பிடித்தது – 10 [பூக்களைப் பாருங்கள் புரியும்!]

பூக்களைப் பாருங்கள் புரியும்!

பூக்களைப் பாருங்கள் புரியும்!

பூக்களைப் பாருங்கள் புரியும்!
பூக்கள் ஒரு போதும்
புலம்புவதில்லை!

ஜன்னம்-
சகதியில் நிகழந்தாலும்
முட்களுக்கு இடையே
மோதலில் பிறந்தாலும்
பூக்கள் ஒரு போதும்
புலம்புவதில்லை!

தரிசனம் தந்து
கவலை மறக்க்க கற்றுத்தரும்
ஞானிகள் – மலர்கள்!
’பெறுவதைவிடத் தருவதே சுகம்’
இது –
மலர்கள் மெளன பாஷையால்
சொல்லும்
மகாதத்துவம்!

கிள்ளுகிற கைகளுக்கும்
கிளுகிளுப்பைத் தரும்
உன்னத உள்ளம்
பூக்களுக்கு மட்டுமே உண்டு!

எந்திரச் சக்கரங்களுக்குள்
நசுக்கப்பட்டாலும்
வாசணைத்திரவியமாகி
சாகாவரம் பெற்றுச் சரித்திரம்
படைக்கிறது!

பலன் தருவதே வாழக்கை
இந்த பாடம் படிக்கப்
பள்ளிக்கூடம் வேண்டாம்.
பூக்களைப் பாருங்கள் புரியும்!

படித்ததில் பிடித்தது – 9 [வாழக்கை]

படித்ததில் பிடித்தது – 9 [வாழக்கை]

படித்ததில் பிடித்தது – 9 [வாழக்கை]

படித்ததில் பிடித்தது – 9 [வாழக்கை]

நேற்று பெய்த
அடைமழையில்
கலைந்து போயின மேகங்கள்
நீலம் கலையாத
வானத்தில்
தனித்தீவாய் முழுநிலவு
நேற்று வரை
மனதில் நீங்கா பாரம்
இன்று தான் நிமிர்ந்து பார்க்கிறேன்
பால் நிலா ஒளியை
வாழ்க்கை இன்னும் இருக்கிறது
ரசிக்க…

படித்ததில் பிடித்தது – 8 [காலை எழுந்ததும் காதல்…]

படித்ததில் பிடித்தது – 8 [காலை எழுந்ததும் காதல்…]

படித்ததில் பிடித்தது - 8 [காலை எழுந்ததும் காதல்...]

படித்ததில் பிடித்தது – 8 [காலை எழுந்ததும் காதல்…]

ஒரு வாழ்த்து மடலுக்கான அட்டையை தேர்ந்தெடுத்தலில் செலவான காலம் சொல்லும் உன் மீதான அன்பை…

ஊட்டிவிடுகையில் விரலை கடிக்கவில்லையென்றால்.. அப்புறம் என்ன காதல் அது!

எத்தனை பூ யாருக்காக சூடியிருப்பினும் பதிணெண் பருவத்தில் நீ முள்ளின் முனை தாங்கி பறித்து சூட்டிவிட்ட கள்ளிப்பூவில் காதலுற்ற கள்ளி நான்.

சாக்லெட்டும் ஐஸ்கிரீமும் பல சுவைத்தாலும் பதிணெண் பருவத்தில் நீ களவாடி தந்த திருட்டு மாங்காய் தித்திக்கிறது உன்னை போலவே நாவில்!

பட்டு உடைகள் பல இருந்தாலும் பதிணெண் பருவத்தில் நீ இழுத்தபோது கிழிந்த ரோசாப்பூ போட்ட மஞ்சள் பாவாடை மனதுள் நிற்கிறது… உன்னைபோல்