The Life of Ram – கரை வந்த பிறகே

The Life of Ram – கரை வந்த பிறகே

96 (2018)
பாடியவர்: பிரதீப் குமார்
இசை: கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா
இயக்கம்: பிரேம் குமார்

கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

வாழா
என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆழ்கிறேன்

ஹே.. யாரோபோல்
நான் என்னைப் பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்

நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்

இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா..

நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்

தோ…காற்றோடு
வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்

நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்

திமிலேரி காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்

ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே..
ஆரோ ஆரிராரிரோ..
ஆரோ ஆரிராரிரோ..

கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே.
புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே..

 

உன்னால் உன்னால்… உன் நினைவால்…

உன்னால் உன்னால்… உன் நினைவால்…

MS தோனி  (2016)
பாடியவர்: பாலக் முச்சல்
இசை: அமால் மாலிக்
பாடலாசிரியர்: பா.விஜய்
இயக்கம்: நீரஜ் பாண்டே

உன்னால் உன்னால் உன் நினைவால்
உலகில் இல்லை நான் தானே
உள்ளே கேட்கும் ஓசையிலே
உன்னை உன்னை கேட்டேனே

உன்னோடு சேர்ந்து நெடுந்தூரங்கள்
காலாற நடந்து மிதந்ததேனே
உன்னிடம் தந்த இதயத்தை தேடி
உன்னில் என்னை தொலைத்தேனே

எந்தன் விழி ஓரங்கள்
உன் இமையே சாயுதே
என் கண்களை மூடினால்
உந்தன் முகம் தெரியுதே

என் பகல் உன் கண்ணில்
நீ இல்லை என்றாலே
நான் ஏதும் இல்லா இரவு தான்

நான் உன்னை உனக்கே தெரியாமல்
கொஞ்சம் கொஞ்சமாக படித்தேனே
பூமியில் உள்ள காதலை எல்லாம்
உன்னால் வாழ்ந்தாய் ரசித்தேனே

இன்னும் இன்னும் கனவுகள்
உன்னைப் பற்றி வேண்டுமே
என்னென்னமோ ஆசைகள்
உன் நினைவும் தூண்டுமே

என் மழைக்காலங்கள்
வெயில் நேரங்கள்
எல்லாமே உன்னில் தொடங்குதே

ஓரேயொரு புன்னகை போதும் அன்பே
உனக்கென காத்துக்கிடப்பேனே
ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி
உன்னில் வாழத் துடித்தேனே..

 

 

ஏய்… சண்டக்கரா

ஏய்… சண்டக்கரா

இறுதிச் சுற்று (2016)
பாடியவர்: தீ
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடலாசிரியர்: விவேக்
இயக்கம்: சுதா

ஏய்.. சண்டக்கரா குண்டு முழியில
ரெண்டு உயிரை தேடி பாயுதே
குத்து சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்
முத்த சண்ட என்னோட நீ போட வேணும்
தனிமை தொரத்த அலையுற நானும்
மனச திறந்து என்ன காப்பாத்து

தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமாஆஆஆ
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமாஆஆஆ

எதிரானையே அழகாளனே
உன்னை வந்து ஒரசாம ஒதுங்கி நடந்தேன்
எது மோதி நா இடம் மாறினே
தடுமாறி முழிச்சே நா உனக்குள்ளே கிடந்தே

கண் கட்டி வித்தை காட்டி
என்னை எப்போ கட்டி போட்டே
நான் என்னை எழுதி நீட்ட
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட

தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமாஆஆஆ
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமாஆஆஆ

சிறு ஓடையில் ஒரு ஓடமா
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
உனை பார்த்ததும்
வழி ஓரமா
உயிரோட ஒரு பாதி கழண்டோடுதடா
என் ஆச ரொம்ப பாவம்
கொஞ்சம் கண் எடுத்து பாரு
நீ மோச பார்வை வீசி
மதி கெட்டு திரியும் மதியை பாரு

தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமாஆஆஆ
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமாஆஆஆ

ஏய் சண்டக்கரா குண்டு முழியில
ரெண்டு உயிரை தேடி பாயுதே

தனிமை தொரத்த அலையுற நானும்
மனச திறந்து என்ன காப்பாத்து

தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமாஆஆஆ
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமாஆஆஆ