படித்ததில் பிடித்தது – 6 [மகளெனும் தேவதை]

படித்ததில் பிடித்தது – 6 [மகளெனும் தேவதை]

மகளெனும் தேவதை

மகளெனும் தேவதை

தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் – மகளெனும் அடைமொழியோடு.

தேவதை என்றால் எப்படி இருப்பாள் என்று கேட்கிறாள் மகள். அவளைப்பற்றி அவளிடமே எப்படி கூறுவது?

புரை ஏறும் போது நாம் மெதுவாக தலையில் தட்டினாலும் வேண்டுமென்றெ இன்னொரு முறை இரும்மி தானே தட்டிக்கொள்ளும் என் மகள். அழகு!

நிலாச்சோறு மூன்று வகைப்படும்.

  • நிலாக்காட்டி சோறூட்டுவது (தாய்)
  • நிலாவே சோறூட்டுவது (மனைவி)
  • நிலவுக்கே சோறூட்டுவது (மகள்)

விழிகள் விரித்து தன் ஆசைகளை விவரிக்கிறாள் என் மகள். இந்தப் பிஞ்சு மனதில் இத்தனை கனவுகளையா சுமக்கிறாளென்று விழிவிரித்து நான்!