மழைச்சாரல்  – 7 [சாரலின் சங்கேதங்கள்]

மழைச்சாரல் – 7 [சாரலின் சங்கேதங்கள்]

மழைச்சாறல் – சாரலின் சங்கேதங்கள்

சங்கீதச் சாரலில்
சங்கேதங்களால் – தன்
அகம் மகிழும்
சிறு குழந்தையை
சினம் கொண்டு அழைக்கும்
அன்னைக்கு தெரியுமா
சாரலின் சங்கேதங்கள்!

மழைச்சாரல்  – 6 [மழை நாட்களில்…]

மழைச்சாரல் – 6 [மழை நாட்களில்…]

மழை நாட்களில்...

பனித்தூறலாய்ப் பொழியும்
மழை நாட்களில்…

விடுமுறை
என அறிந்திருந்தும்
நனையும் விருப்பத்துக்காய்
பள்ளி சென்ற நாட்கள்…

குடை
கொண்டு செல்லாத
வருத்தம் சிறிதும் இன்றி
நீரில் நடை போட்ட
நாட்கள்…

புத்தக தாள்கள்
கப்பல்களாய்
மழை நீரில்
மிதந்த நாட்கள்…

இந்நினைவுகளுள்
உன் நினைவும்
இன்று,

ஜன்னல் கம்பிகளில்
கொட்டி கொண்டிருக்கும்
நீர்த்திவலைகளைப் பார்த்தபடி
தேநீர் பருகும் போது
எழத்தான் செய்கிறது!

நீ ஒருவேளை
ஜன்னலை மூடி வைத்திருக்க கூடும்
நினைவுகளை மட்டும்
கரைய விட்டு…