ஆனந்த யாழை

ஆனந்த யாழை

தங்கமீன்கள் (2013)
பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
இயக்கம்: ராம்

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை.
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி!

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்தே பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி – அடி
கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி!
இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் வரைந்தே பார்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !
இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)
பாடியவர்: விஜய் ஏசுதாஸ்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
இயக்கம்: பாண்டிராஜ்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே

கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன்முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன்முகம்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை…
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே

அழகோ அழகு

அழகோ அழகு

சமர் (2012)
பாடியவர்: நரேஷ் ஐயர்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்
இயக்கம்: திரு

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அழகோ அழகு
அழகோ அழகு

எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு

மெல்லிடையை பற்றி சொல்லா
இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…

காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…

அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு

அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ

அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ

ஒரு நாளில் வாழ்க்கை

புதுப்பேட்டை (2006)
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : நா.முத்துகுமார்
இயக்கம்: செல்வராகவன்

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஹோ ஒ.. ஒ.. கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஒ.. ஒ.. ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஹோ ஒ.. ஒ.. கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஒ.. ஒ.. கண் மூடிக்கொண்டால்
ஒ.. ஹோ.. ஒ..

போர்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஒ.. ஒ.. ஒ.. அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஒ.. ஒ.. ஒ.. இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஒ.. ஒ.. ஒ.. மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஒ.. ஒ.. ஒ.. அந்த கடவுளை கண்டால்
ஒ.. ஹோ.. ஒ.. யே.. ஹே

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஒ.. ஒ.. ஒ.. பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்
ஒ.. ஒ.. ஒ.. பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்
ஒ.. ஒ.. ஒ.. கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்
ஒ.. ஒ.. ஒ.. மறு பிறவி வேண்டுமா
ஒ.. ஹோ.. ஒ..