ஆராரோ ஆரிராரோ

அவள் பெயர் தமிழரசி (2010)
பாடியவர்: வளப்பைகுடி வீரசங்கர்
இசை: விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்: ஏகாதசி
இயக்கம்: மீரா கதிரவன்

ஆராரோ ஆரிராரோ என் கண்ணே ஆரிராரோ ஆராரோ
ஏ.. வெய்யிலடையும் பனங்காடு மழையடையும் குத்தாலம்
நாமடையும் கூட்டுக்குத்தான் என் கண்ணே நல்ல சேதி எக்காலம்..
என் கண்ணே நல்ல சேதி எக்காலம்

மாசத்துல ஒரு நாளு.. என் கண்ணே
மாசத்துல ஒரு நாளு.. சந்திரரும் தூங்குவாக
ஓங்.. தூக்கம் பாக்கத்தானே என் கண்ணே
சூரியரும் ஏங்குவாக…
ஓங்.. தூக்கம் பாக்கத்தானே என் கண்ணே நவமணியே
சூரியரும் ஏங்குவாக…

நீ மல்லாந்து தூங்கும் அழக..
என் கண்ணே… மரக்கா போட்டு அளக்கணுமே
என் கண்ணே நீ குப்புறக்கா தூங்கும் அழக கூடை போட்டு அளக்கணுமே
குப்புறக்கா தூங்கும் அழக என் கண்ணே கூடை போட்டு அளக்கணுமே

உன்ன தூங்க விட்டு நான் ஓடுவேண்டி கழநிக்குதான்
அடி உன்ன தூங்க விட்டு நான் ஓடுவேண்டி கழநிக்குதான்
ஓங் நெனப்பில் விரலறுப்பேன் அடி ஆத்தே நான் எங்கே கருதறுப்பேன்
ஓங் நெனப்பில் விரலறுப்பேன் அடி ஆத்தே நான் எங்கே கருதறுப்பேன்

பிறந்தது ஒரு சீமே.. என் கண்ணே வளர்ந்தது ஒரு சீமே
நம்ம வயித்த கழுவத்தான் என் கண்ணே வாழுறது ஒரு சீமே
நம்ம வயித்த கழுவத்தான் என் கண்ணே வாழுறது ஒரு சீமே

சீட்டெடுக்கும் சின்ன கிளி ஏங் சீதைக்கி என்ன சொல்லும்
அந்த சீட்டெடுக்கும் சின்ன கிளி ஏங் சீதைக்கி என்ன சொல்லும்
பாட்டெடுக்கும் குயிலு ஒன்னு நல்லதொரு பதிலுதான் சொல்ல வேணும்
பாட்டெடுக்கும் குயிலு ஒன்னு நல்லதொரு பதிலுதான் சொல்ல வேணும்

உங் கையிரண்ட மோந்து பார்த்தா கற்பூர வாசம் வரும்.
உன் கையிரண்ட மோர்ந்து பார்த்தா கற்பூர வாசம் வரும்
என் கண்ணே நவமணியே
உன் பாதம் தொட்ட மண்ணு
பொன்னாக பூத்து வரும் என் கண்ணே
உன் பாதம் தொட்ட மண்ணு என் கண்ணே
பொன்னாக தொலங்கி வரும்
ஆராரோ ஆரிராரோ… என் கண்ணே… ஆரிராரோ ஆராரோ…

என்னை தேடி காதல்

காதலிக்க நேரமில்லை (VijayTV Serial Title Song)
பாடியவர்: சங்கீதா
இசை: விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் : தேன்மொழி தாஸ்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ஓ

என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் – உன்னிடத்தில்
கொண்டுவர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லியனுப்பு ஓ

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கோள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ஓ ஓ

யாரோ உன் காதலில் வாழ்வது
யாரோ உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வது
ஏனோ ஒரு பகல் என சுடுவது
ஏனோ என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரமில்லையா?
இலையை போல் என் இதயம்
தவறி விழுதே..

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு ஓ ஓ

பூக்கள் உதிரும் சாலை வழியே நடந்து செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே நினைத்து கொள்கிறேன்